Type Here to Get Search Results !

திமுகவின் பண பலத்தை மனபலத்தால் எதிர்கொள்ள அதிமுக ஓபிஎஸ் அணி தயாராக உள்ளது

திமுகவின் பண பலத்தை மனபலத்தால் எதிர்கொள்ள அதிமுக ஓபிஎஸ் அணி தயாராக உள்ளது திமுகவின் பண பலத்தை மன பலத்தால் எதிர்கொள்ள அதிமுக ஓபிஎஸ் அணி தயாராக உள்ளது, ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல்: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தகவல்
ஈரோடு: அண்ணாமலையின் சந்திப்பிற்கு பின், இபிஎஸ் ஆதரவு வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வேட்புமனு தாக்கல், 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் இன்று (ஜன.3) வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.
திமுகவின் பண பலத்தை மனபலத்தால் எதிர்கொள்ள அதிமுக ஓபிஎஸ் அணி தயாராக உள்ளது திமுகவின் பண பலத்தை மன பலத்தால் எதிர்கொள்ள அதிமுக ஓபிஎஸ் அணி தயாராக உள்ளது, என அந்த அணி துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் கட்சித் தேர்தல் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை அவர் திறந்து வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளை இணைக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் முயற்சி அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்பதை உணர்த்துகிறது எங்களுக்கு மட்டும் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். உண்மையில், ஓபிஎஸ் சின்னத்தைப் பெறுவதற்கான படிவங்களில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறார். அதை இபிஎஸ்-க்கு கொடுக்கவும் தயார் என்றார்.ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.எனவே எங்கள் வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற மாட்டோம். தேசிய முற்போக்கு கூட்டணியில்இருக்கிறோம்.எனவே பா.ஜ.க., மற்றும் கூட்டணி தலைவர்களின் படங்கள் மற்றும் கொடிகளை பேனர்களிலும் பிரச்சாரங்களிலும் பயன்படுத்துகிறோம்.எங்கள் தலைவர் ஓ.பி.எஸ்.ஆனால், மோடி தேசத்தின் பிரதமர்.அவர் உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்.அதனால் அவரது படத்தை பயன்படுத்துகிறோம்.அவரது முகத்தை பயன்படுத்தி ஓட்டு வாங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.எங்கள் கட்சி மட்டுமே உண்மையான அதிமுக. தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பின்னால் இருக்கிறார்கள், இபிஎஸ் அணித்தலைவர் செங்கோட்டையன் தன்னிடம் 98.5 சதவீத தொண்டர்கள் உள்ளனர் என்கிறார் அதை அவர் நிரூபிக்கட்டும்.உண்மையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால்தான் கட்சி பலவீனமடைந்தது.இப்போது கூட ஒற்றுமையும், கூட்டு தலைமையும் வேண்டும்.ஆனால் இபிஎஸ் ஏற்கவில்லை. இப்போது தேர்தல் ஆணையமே அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை நிராகரித்துவிட்டது இபிஎஸ் தான் நீதிமன்றம் செல்லும் சூழ்நிலையை உருவாக்கினார். உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் நிலைப்பாட்டை அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு அறிவிக்கப்பட்டார். அவர் இன்று (ஜன.3) வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை - இபிஎஸ் சந்திப்பிற்கு பிறகு, மனுத்தாக்கல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் பணிமனையில், தேசிய ஜனநாய 
 கூட்டணி பாசறை கூட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஒருபுறம் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் முழு உருவப் படங்களும், மறுபுறம் பிரதமர் மோடி, ஓபிஎஸ் படங்களுடன், வேட்பாளர் படமும் இடம் பெற்றுள்ளது


இதோடு, பெரியார், காயிதேமில்லத், அம்பேத்கார், முத்துராமலிக்கத் தேவர், தீரன் சின்னமலை, காமராஜர் ஆகியோரின் படங்களுடன், பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஏ.சி.சண்முகம், தனியரசு, ஜான் பாண்டியன் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் படங்களும் உள்ளன. பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை.

இதுகுறித்து தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியதாவது" தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் படங்கள் தேர்தல் பணிமனையில் இடம் பெற்றுள்ளன. இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும். எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்தால் வரவேற்போம். பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாக்கு கேட்க வருவார்களா என்பது அவர்கள் விருப்பம். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்து விட்டார். எனவே, ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். எங்களது வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்." 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.