Type Here to Get Search Results !

மகன்கள் கவனிக்கவில்லை என்று கூறிஈரோடு எஸ். பி ஆபிஸ் அருகே தீ குளிக்க வந்த மூதாட்டியால் பரபரப்பு

மகன்கள் கவனிக்கவில்லை என்று கூறிஈரோடு எஸ். பி ஆபிஸ் அருகே தீ குளிக்க வந்த மூதாட்டியால் பரபரப்பு
ஈரோடு, பிப்.10-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மலை சீனாபுரம், குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (88) தனது மூத்த மகள் கவுரியுடன் இன்று ஈரோடு எஸ் பி அலுவலகத்திற்கு வந்தார். எஸ்.பி. அலுவலக நூழைவாயில் அருகே திடீரென அவர் மண்ணெண்ணெய் கேனை எடுத்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த மூதாட்டி இடமிருந்து கேனை பறித்தனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி மனு கொடுக்க அனுமதித்தனர். 
அந்த மனுவில் வள்ளியம்மாள் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் முத்து சரவணன். எங்களுக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இதனால் நான் எனது மூத்த மகள் கவுரியுடன் சீனபுரம் பகுதியில் உள்ள சொந்த வீட்டில் தங்கி இருந்தேன். இந்நிலையில் எனக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. சோதனையில் குடல் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. இதற்காக மகன்களிடம் மருத்துவ உதவி கேட்டேன். ஆனால் அவர்கள் உதவி செய்யவில்லை . மகன்கள் இருவரும் அரசு வேலையில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி சிகிச்சைக்காக எனது மூத்த மகளுடன் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது எனது 2 மகன்கள் அவரது மனைவிமார்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 50 ஆயிரத்தை எடுத்துள்ளனர். பின்னர் மற்றொரு பூட்டை போட்டு சென்று விட்டனர். எனவே என்னை கவனிக்காமலும் மருத்துவ உதவி செய்யாமலும் எனது வீட்டை அபகரித்த எனது மகன்கள் மற்றும் மருமகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.