ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய செங்கோட்டையன் அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் சேலம் ஜங்ஷன் ஆ.அண்ணாதுரை தலைமையில் இயக்க நிர்வாகிகள் சந்தித்தனர்.*
*ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அம்பேத்கார் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்துள்ளது.அதன் அடிப்படையில் இன்று 10.2.2023 ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களையும், அதிமுக ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.பி ராமலிங்கம் அவர்களையும் அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநிலத் தலைவர் சேலம் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை அவர்கள் தலைமையிலும், மாநில துணை தலைவர் ஈரோடு V.ஜெயராமன், வழிகாட்டுதல் குழு தலைவர் சேலம் M.ஆசீர்வாதம் ஆகியோர் முன்னிலையில் சந்தித்து தேர்தல் பிரச்சாரம் குறித்து பேசப்பட்டது.இந்த சந்திப்பின்போது அம்பேத்கார் மக்கள் இயக்கம் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சின்னராஜ்,ஈரோடு மாவட்ட மகளிரணி தலைவி பழனியம்மாள், பெருந்துறை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராமசாமி, அந்தியூர் தாலுகா பொறுப்பாளர்கள் வெங்கடசாமி, பழனிச்சாமி, அம்பேத்கார் மக்கள் இயக்கம் சேலம் மாநகர தலைவர் நேரு நகர் முருகன், மாநகர பொருளாளர் மாசி.ரகு,ஓமலூர் ஒன்றிய தலைவர் வீ.ம ராம்ஜி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் நவீன் உள்ளிட்ட அம்பேத்கார் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.*