Type Here to Get Search Results !

ஈரோடு இடைத்தேர்தல்; இதுவரை பணம் மற்றும் பொருட்கள் என ரூ.24.27 லட்சம் பறிமுதல்

ஈரோடு இடைத்தேர்தல்; இதுவரை பணம் மற்றும் பொருட்கள் என ரூ.24.27 லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதியில், இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற பணம் மற்றும் பொருட்கள் என ரூ.24.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என, 4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 20-ம் தேதி முதல் இன்று வரை, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.23 லட்சத்து 62 ஆயிரத்து 340 பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.51 ஆயிரத்து 280 மதிப்பிலான 73.4 லிட்டர் மதுபானம், ரூ.13 ஆயிரத்து 300 மதிப்பிலான 850 கிராம் கஞ்சா, ரூ.253 மதிப்பிலான புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை, பணம் மற்றும் பிற பொருட்கள் என ரூ.24 லட்சத்து 27 ஆயிரத்து 173 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.