முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம், மதிமுக.வைகோ ,முன்னாள் கேரளா ஆளுநர் சதாசிவம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்...
மறைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்..இல்லத்தில் தற்போது
ப சிதம்பரம், வைகோ முன்னாள் கேரளா ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்..
முன்னாள் மத்திய அமைச்சர் இ வி கே எஸ்இளங்கோவனின் மகனும் தந்தை பெரியாரின் கொள்ளு பேரன் ஆன திருமகன் ஈவேரா கடந்த புதன்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார்..
காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த திருமகன் ஈவேராவின் மறைவு தமிழக அரசியலில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்...
அந்த வகையில் மதிமுக வைகோ முன்னாள், நிதியமைச்சர்
ப சிதம்பரம், முன்னாள் கேரள ஆளுநர் சதாசிவம், உள்ளிட்டோர் திருமகன் ஈவேராவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்...