Type Here to Get Search Results !

பெண் தெய்வமான ஹெத்தையம்மனின் மூல ஸ்தலம் கோத்தகிரி அருகிலுள்ள பேரகணியில் திருவிழாவுக்குபடுகர் பாரம்பர்ய உடையில் வளம் வந்த சாய் பல்லவி

நீலகிரி பெண் தெய்வமான ஹெத்தையம்மனின் மூல ஸ்தலம் கோத்தகிரி அருகிலுள்ள பேரகணியில் திருவிழாவுக்குபடுகர் பாரம்பர்ய உடையில் வளம் வந்த சாய் பல்லவி 
அனைத்து கிராமங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்கள். வெளிநாடுகளில் பணிபுரியும் படுகர்கள் கூட சிறப்பு விடுப்பு எடுத்து இந்த ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்று நடத்தி வருகின்றனர்கள்.
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள் தங்களின் மூதாதையான ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். பெண் தெய்வமான ஹெத்தையம்மனின் மூல ஸ்தலம் கோத்தகிரி அருகிலுள்ள பேரகணியில் அமைந்துள்ளது. இது மட்டுமல்லாது படுகர் இன மக்கள் வாழ்ந்து வரும் பல கிராமங்களிலும் ஹெத்தையம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஹெத்தையம்மன் திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது
அனைத்து கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் பணிபுரியும் படுகர்கள் கூட சிறப்பு விடுப்பு எடுத்து இந்த ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்.இந்த நிலையில், 
முன்னணி திரைப்பட நடிகையான சாய் பல்லவி பாரம்பர்ய உடையான ஹெத்தையம்மன் உடையணிந்து விழாவில் பங்கேற்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சிகொடுத்திருக்கிறார்.
படுகரின பெண்கள் பாரம்பர்யமாக உடுத்தும் வெண்ணிற ஆடையில் வந்ததுடன் பாரம்பர்ய அணிகலன்களான வெள்ளி நகைகளையும் அணிந்து கொண்டு ஹெத்தையம்மன் கெட்டப்பில் தன் உறவினர்களுடன் திருவிழாவில் பங்கேற்றிருக்கிறார். 
திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியை ஹெத்தையம்மன் அவதாரத்தில் கண்ட உள்ளூர் மக்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். அதே கெட்டப்பில் உறவினர்களுடன் செல்ஃபி, போட்டோஷ சாய் பல்லவி அமர்க்களப்படுத்தினார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.