ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தமாகாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஈரோட்டில் தமாகா கட்சியினரின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் முன்னாள் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகா தேர்தல் வேட்பாளருமான யுவராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் ஜி கே வாசன் அவர்கள் அதிமுக கூட்டணி கட்சியுடன் பேசி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு தாமாக முழு மனதோடு பாடுபடும்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பேட்டி : யுவராஜ் – தமாகா இளைஞர் அணி தலைவர்.