ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறிச்சந்தை உள்ளிட்ட பலவேறு வளர்ச்சிதிட்ட பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுபினரும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா நேரில் ஆய்வு செய்த பின் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து சத்தி நகர்மன்ற தலைவர் ஜானகி தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகள் வழஙகும் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ .ராசா கலந்துகொண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பலவேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது....
சத்தியமங்கலத்தில் விளையும் மல்லிகை பூவானது பண்டிகை அல்லாத காலத்தில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு குப்பையில் கொட்டப்படுகிறது
இவ்வாறு மல்லிகைக்கு உரிய விலை கிடக்காத நேரங்களில் அதனை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றுவதற்கு வேளாண்மை துறை அமைச்சர் மூலம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
மாட்டுக்கோமியத்தை குடித்தால் கொரானா சரியாகும் என்ற கட்சியை சேர்ந்த அண்ணாமலை பேசுவதை கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும்
இன்னும் மூன்று தலைமுறைகளை கடந்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பது முடியாத காரியம் என்றும் ஆ.ராசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .