ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அண்ணாமார் திருமண மண்டபத்தில் கொங்கு நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் கட்டுத்தடிக்காரன் குணாளன் நாடார் அவர்களின் 267 வது பிறந்தநாள் விழா மிகசிறப்பாககொண்டாடப்பட்டது.
நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழா கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குணாள நாடார் அவர்களுக்கு வெள்ளோடு பகுதியில் மணிமண்டபம் அமைத்து அவருடைய சிலையை நிறுவியும், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக நடத்திய அரசை வலியுறுத்துதல். பனை வாரிய உறுப்பினர்களின் விபத்து இறப்பீட்டுத் தொகையை உயர்த்தி தர வேண்டும். நாடார் சமுதாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் 15% இட ஒதுக்கீடு அரசு தர வேண்டும். வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே வருமானம் உள்ள பனை மர தொழிலாளர்களுக்கு, மீதமுள்ள ஆறு மாதத்திற்கு மீனவர்களுக்கு கொடுப்பதை போல் 6 மாத காலம் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். கோபிசெட்டிபாளையம் மேற்கு நுழைவாயில் பழுது பார்த்து, வர்ணம் பூசி காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். கள்ளுக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். பனை மரத்தை தமிழக முழுவதும் விதைகள் மூலம் விதைத்து பனை மரங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். நாடார் சமுதாயப் பெண்களுக்கு சுய உதவி குழு மூலம் அதிக அளவில் கடன் உதவி தந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வழி செய்ய வேண்டும். கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவரை இழந்த நாடார் சமுதாயம் இளம் பெண்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற அரசு பணியில் அதிக இட ஒதுக்கீடு தர வேண்டும். குன்னத்தூர், நம்பியூர், சிறுவலூர், வெள்ளோடு ஆகிய பகுதிகளில் பனை அருங்காட்சியகம் மற்றும் பனைத் தொழில் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும். பதநீர் காய்ச்சும் பெண்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் தொழில் பயிற்சி அளித்து எளிய வகையில் அவர்களுக்கு கடன் வசதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நாடார் சமுதாய மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்