ஈரோட்டில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் / மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வசம் வாக்கு பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அன்று 50 வாக்குப்பதிவு மையங்களில் 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் கட்டமாக 882 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் வசம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் முதல் கட்டமாக சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் கணினி முறையில் தேர்வு செய்யப்பட்டு தற்பொழுது என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மாநகராட்சி மையம் மண்டபத்தில் பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கப்படும் தேர்தலுக்கான முதல் கட்டப் பணி தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது என கூறினார்.