ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்களுக்கு அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை வடிவேல்ராமன். தலைவர்
ஆதரவு அளித்து தீவிர பிரச்சாரம்
தமிழ் நாட்டில் திராவிட மாடல் மற்றும் சமூக நீதி ஆட்சியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் பட்டியலின மக்களின் நீண்டநாளைய கோரிக்கைகள் நிறைவேற்றுப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இடஒதுக்கீடு அனைத்து துறைகளில் பின்பற்றப்படுவதை ஆராய சமூகநீதி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமேதை டாக்டர். அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எங்களது 50 ஆண்டுகால கோரிக்கையான ஈரோட்டில் டாக்டர். அம்பேத்கார் சிலை நிறுவ அனுமதி அளித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் பொல்லான் மணிமண்டபம் அமைக்க 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெறுகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவு அளித்தும் தலைவர் வடிவேல்ராமன் தலைமையில் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வெற்றி பெறச்செய்வது என அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவையின் செயற்குழு கூட்டத்தின் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இதன்மூலம்தெரிவித்துக்கொள்கிறேன்.