ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அதன்படி பிப்ரவரி மாதம் 27ம் தேதி இத்தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழக வீட்டுவசதித்துறை முத்துசாமி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு ஆதரவாக, கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி..
ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கி தரப்பட்டிருக்கிறது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேர்தல் பணியாற்ற வந்துள்ளோம். கழகத் தோழர்களுக்கு உதவியாக பொது மக்களுக்கு உதவியாக தேர்தல் பணிகளை செய்ய இருக்கின்றோம். நிச்சயமாக இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார். அதற்கு முழுமையாக அமைச்சர் முத்துசாமி தலைமையில் பணியாற்றுவோம்் தேர்தலில் மக்கள் கோரிக்கைகளை தேர்தல் முடிந்ததும் செய்து தருவோம் ஏற்கனவே மக்களுக்கான தேவைகளை செய்து கொண்டிருக்கின்றோம். இந்த ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்போம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு தான் வரி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. வளர்ச்சி பணிகளுக்கு ஏற்ப வரி வசூலிப்பது அவசியம். எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். நாங்கள் மக்களுக்கு செய்த பணிகளையும் சாதனைகளையும் சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றோம்.