காலிபாட்டில்களோடு களமிறங்கும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஈரோடுகிழக்குதொகுதிஇடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெபாசிட் தொகைக்காக காலி பாட்டில்களைப் பொறுக்க அந்த கட்சியின் வேட்பாளர் திட்டமிட்டு இருக்கிறார்.
இதற்கென தேர்தல் ஆணையத்தால்
காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது .
அதற்காக இந்த ஜனவரி 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது .
இதனையொட்டி
தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் தேர்தல் பணிகளைத் தொடங்காத நிலையில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அந்த தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு
உள்ளார்.
இதில்
எம்.எஸ்.ஆறுமுகம் என்பவர் அத்தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கலின்போது டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்பதால் அதற்கான நிதியைப் பெறுவதற்காக டாஸ்மாக் கடைகளின் வெளியே கிடக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி விற்பனை செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
எதிர்வரும் 21-ம் தேதி முதல் காலிபாட்டில்களைப் பொறுக்கி சேகரித்து அவற்றை விற்பனை செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார் .
அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு டெபாசிட் தொகையைக் கட்டப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தங்களது மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்திற்கு
"காலி பாட்டில்கள் தான் தங்களுக்கான நிதி என்றும் ,
டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தான் எங்களுக்கு கதி" என்ற முழக்கத்தோடு காலிபாட்டில்களைப் பொறுக்கவும், ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தைச் சந்திக்கவும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தயாராகிய
அதன் படி இந்த வேட்பாளர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியான ஈரோடு பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிமகன்களால் வீசி செல்லப்பட்ட காலி மதுபான பாட்டில்களை தேடி சென்று சேகரிக்கும் பணியில் ஈடுபட்டதோடு ஈரோடு நூதனமான முறையில் அப்பகுதியை சேர்ந்த வாக்காளர்களான பொது மக்களிடையே டாஸ்மாக் மதுபானத்தினால் மக்களது வரிப்பணம் கொள்ளை போவதோடு
மது குடிக்க வரும் குடிமகன்களிடம் மதுபானங்களை விற்கும் விற்பனையாளர்கள் கூடுதலாக பத்து ருபாய் கொள்ளையில் ஈடுபடுவதால் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு அரசு மதுபான கடைகளிலும் பத்து பத்து ருபாயாககோடிக்கணக்கில்
கொள்ளை போவதாகவும் .
தன்னை மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் மது குடிக்கும் குடிமகன்களுக்கென
பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்துவதாகவும் .
மதுபானங்களின் விலையை குறைக்க
உள்ளதாகவும் .
என பல்வேறு வாக்குறுதிகளை
முன் வைத்து நூதனமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .