ஈரோடு கிழக்கு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்….
காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனான திருமகன் ஈவெரா சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார்.
இதனையொட்டி இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் மீண்டும் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் ஈ வி கே எஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சார்ந்த யாரோ ஒருவர் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்தையும் திமுக செய்திருந்ததாக கூறப்படுகிறது.
எனவே ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டு மகன்களில் இரண்டாவது மகனான சஞ்சய் சம்பத்திற்கு இந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்திருந்த நிலையில், தனக்கும் சீட்டுதர வேண்டும் என்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள் ஜி.ராஜன் போர்க்கொடி தூக்கிஇருந்தார். இதனை கருத்தில் கொண்ட காங்கிரஸ் மேலிடம் இந்த போட்டியினை தவிர்க்கும் பொருட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே. எஸ். இளங்கோவேன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈ.வி.கே. சம்பத் மற்றும் சுலோச்சனா சம்பத் ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வயது 7 5, இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும் திருமகன் ஈவெரா, சஞ்சய் சம்பத் ஆகிய இரண்டு மகன்கள் இருந்து வந்தனர்.
இதில் சமீபத்தில் திருமகன் ஈவெரா காலமானார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
இளைஞர் காங்கிரஸ் உறுப்பினராகவும் .
ஈவி. கே.எஸ் இளங்கோவனின் குடும்ப பின்னணியில் இவர்கள் குடும்பத்தினர் எந்தவித லஞ்ச லாவண்ய குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்கள். மேலும் தங்களது பூர்வீக சொத்துக்களை விற்றே தேர்தல் செலவு உள்ளிட்ட செலவுகளை செய்து வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களது குடும்பத்திற்கென்று ஒரு நல்ல பாரம்பரிய நற்பெயர் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் 2009 -2014 ஆம் ஆண்டு கோபி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.
மத்திய அமைச்சராக இருந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து சத்தியமங்கலம் வரை ரயில் பாதை அமைக்க திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் அந்தத் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் போனது.