ஈரோடு வில்லரசம்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணி (53). அவரது மனைவி கவிதா. மணி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு காசிபாளையம் கிளையில் கடந்த 22 வருடமாக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.மணி வீட்டில் வைத்து அடிக்கடி பீடி குடித்து வந்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மணி கோபித்துக் கொண்டு மனைவியுடன் சில நாட்கள் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மணி வேலைக்கு சென்று நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவியிடம் சாப்பாடு கேட்ட போது நீங்கள் வெளியில் சாப்பிட்டு வந்து விடுவீர்கள் என நினைத்து வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டோம் என்று கூறியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு வீட்டின் மேல் மாடிக்கு மணி தூங்க சென்று விட்டார். இன்று காலை கவிதா மாடிக்கு சென்று பார்த்தபோது கதவை திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இணையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.