Type Here to Get Search Results !

தைப்பொங்கலை வேளாளர் மகளிர் கல்லூரிப் பேரவை மற்றும் நுண்கலை மன்றம் சார்பாக மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

உழைக்கும் மக்கள் இயற்கையைத் தெய்வமாகக் கருதி சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை வேளாளர் மகளிர் கல்லூரிப் பேரவை மற்றும் நுண்கலை மன்றம் சார்பாக மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.கு. ஜெயந்தி அவர்கள் வரவேற்புரை நல்கி விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இவ்விழாவினைக் கல்லூரிச் செயலர் செ.து.சந்திரசேகர் அவர்கள் துவக்கி வைத்து தமிழரின் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் வண்ணம் சிறப்புரையாற்றினார். போகியைக் கொண்டாடும் வகையில் முளைப்பாரி போடப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. மாணவிகள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் கல்லூரி வளாகத்தில் விற்பனை அரங்குகளும், மகிழும் வகையில் இராட்டின வகைகளும் கொண்டு வரப்பட்டன. நுண்கலை மன்றம் மாணவிகளுக்கு கோலப்போட்டி, தனி மற்றும் குழு நடனப்போட்டி பானை ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கும், ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.
 சூரியனுக்குப் பொங்கல் வைத்து, முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நம் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் வட்டக்கும்மி, சலங்கை ஆட்டம், வள்ளிக்கும்மி. கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. இவ்விழாவில் செயலர் செ.து. சந்திரசேகர், இணைச்செயலர் கே.வி.ராஜமாணிக்கம், பொருளாளர் பி.கே.பி.அருண், நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. கே.சின்னுசாமி, கொங்குப் பேரவை செயலாளர் திரு. கே.கே.சி.பாலு, முதல்வர் முனைவர் செ.கு.ஜெயந்தி, பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் திரளாகக் கலந்து சிறப்பித்தார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.