Type Here to Get Search Results !

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக பால்வளத்துறை அமைச்சர் நாசர்மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் ஏழாவது நாளாக வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் ஏழாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவேராவின் மறைவை அடுத்து தொகுதிக்கு இடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது..அதன்படி வரும் பிப்ரவரி 27 இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக காங்கிரஸ் தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்...
அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ஏழாவது நாளாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்...
ஏற்கனவே பெரியார் நகர் வீரப்பன்சத்திரம் மரப்பாலம் அசோகபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பெரிய தோட்டம் முத்துக்குமாரசுவாமி வீதி கிராமடை டீசல் செட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், திமுகவின் துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், காங்கிரஸ் சட்டமன்ற கொறடா உறுப்பினர் செல்வ பெருந்தகை, ஈவி கே ஸ். இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக நேரில் சென்று மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்...

ஏற்கனவே திமுக தரப்பில் அமைச்சர்கள் உட்பட 32 தேர்தல் பணி குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதற்கட்டமாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் வந்து தற்போது பரப்புரை மேற்கொண்டு வருகிறார்...
பேட்டி: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.