கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் மானுவக்காடு பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் மோடி பாசறையின் சட்டமன்றத் தொகுதி நிர்வாகக் குழு உறுப்பினர் சண்முகம் வீட்டில் பெட்ரோல் கேன் வீச்சு..
கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை ..
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் மானுவக்காடு பகுதியில் தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறையின் சட்டமன்றத் தொகுதி நிர்வாகி சண்முகம் வீடு உள்ளது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தார் அவரது வீட்டின் முன்பு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தனர்
இதனையடுத்து அதிகாலை நேரத்தில் சண்முகம் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது பெட்ரோல் நிரப்பி திரி பொருத்தி சிறிய அளவிலான ஜூஸ் பாட்டில் ஒன்றில் வீட்டின் முன் பகுதியில் எரிந்து கொண்டிருந்துள்ளது
இதனை கண்ட சண்முகம் வீட்டின் முன்பு திரி பொருத்திய பாட்டிலில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்
தகவல் அறிந்து வந்த கோபிசெட்டிபாளையம் பொறுப்பு டிஎஸ்பி நீலகண்டன் மற்றும் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வீட்டின் முன் பகுதியில் இருந்த சிறிய அளவிலான பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த சம்பவத்தினால் மானுவ காடு பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது