ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வே.ரா மறைவிற்கு ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆழ்ந்த இரங்கல்!*
தந்தை பெரியார் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் E.V.K.S இளங்கோவன் அவர்களின் மகனும், காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திருமகன் ஈ.வே.ரா நேற்று மதியம் ஈரோட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுதில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பம்பரமாய் சுழன்று மக்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்தார், பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தினார்.
2022 நவம்பர் மாதம் 9ம் தேதி ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக எழுச்சி உரையாற்றினார். பாபர் மசூதி இடிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியாத காரணத்தை கூறி வருத்தங்களை தெரிவித்த ஒரு நல்ல பண்பாளர். எஸ்.டி.பி.ஐ கட்சியோடு உறவை வலுப்படுத்திக் கொண்டு நட்பு பாராட்டியவர்.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி எனது பிறந்தநாளன்று என்னை தொலைபேசியில் அழைத்து நீடூடி வாழ வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார். அன்னாரோடு பலமுறை நேரடியாகவும், அலைபேசி வாயிலாகவும் உரையாடும் பொழுது என்னுடன் மிகவும் அன்போடு, நெருக்கத்துடனும் பழகியது என் கண் முன் நீங்கா நிழலாடுகிறது. அவரது இறப்பு ஈரோடு வாழ் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், மிகப்பெரிய இழப்பாகும்.
அன்னாரை பிரிந்து துயரப்படும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஈரோடு வாழ் பொதுமக்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.