ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களை தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஜிலில் சற்று முன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி எம்பி, மாநில செயலாளர்கள் வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ஆடுதுறை ஷாஜஹான், நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர்கள் இப்ராகிம் மக்கி, முகம்மது பாருக், மகளிரணி தேசிய தலைவர் பாத்திமா முசப்பர் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் வருகை தந்தனர்.