பெருந்துறை வட்டார பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிக்கோயில் ரோடு பிரிவு, பெத்தாம்பாளையம் ரோடு பிரிவு, துடுப்பதி ரோடு பிரிவு, நசியனூர் வடக்கு பகுதி ரோடு பிரிவு, வாவிக்கடை பகுதி ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அரசு மற்றும் அரசுத் துறை அதிகாரிகளை கேட்டு கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 8-1-23 ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணிக்குபெருந்துறை காஞ்சிக்கோயில் ரோடு பைபாஸ் அருகில் உள்ள ஸ்ரீ சின்னாத்தாள் கோயில் திருமண மண்டபத்தில்நடைபெற்றது.
கூட்டத்திற்கு துடுப்பதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே. பெரியசாமி தலைமை தாங்கினார்... பெருந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவர் பல்லவி பரமசிவன் அனைவரையும் வரவேற்று பேசினார்...
தங்கவேல் துவக்க உரை நிகழ்த்தினார். திருப்பூர் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் எம்.பி. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜே.கே. (எ) ஜெயக்குமார்...திமுக ஒன்றிய செயலாளர் கே.பி. சாமி... கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி பாலு....பாரதிய ஜனதாக் கட்சியின் இமயம் சந்திரசேகர்...இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சின்னச்சாமி உள்ளிட்டோர் தாங்கள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் இனிமேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினர்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் திருநாவுக்கரசு,
அஇஅதிமுக ஒன்றியச் செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், ஜெகதீஸ், காடபாளையம் பாலு, நாம் தமிழர் கட்சியின் லோகநாதன், சுள்ளிப்பாளையம் ஊராட்சி தலைவர் தேவேந்திர மாணிக்கம், மார்க்சீஸ்ட் கட்சியின் குப்புசாமி, பெருந்துறை பொதுமக்கள் நல அறக்கட்டளையின் தலைவர் டி.என். சென்னியப்பன், அமைதிப் பூங்கா அறக்கட்டளையின் பொருளாளர் வி. செந்தில் முருகன், லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் செல்வராஜ், காய்கறி மார்க்கெட் சங்கத்தின் பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் சுப்பிரமணியம், பத்திர எழுத்தர் முருகபூபதி மற்றும் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் கருத்துரை வழங்கினர் நிகழ்வில் பெருந்துறை பேரூராட்சித் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சண்முகம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவர் செல்வம், துணைத் தலைவர் சக்தி குமார், ஓலப்பாளையம் பெரியசாமி, அஇஅதிமுக ரஞ்சித்குமார், திமுக நகரச் செயலாளர் திருமூர்த்தி, அஇஅதிமுக நகரச் செயலாளர் கல்யாணசுந்தரம், பங்க் மூர்த்தி, டிசிபி சுப்ரமணியம் உள்ளிட சர்வ கட்சியினர், பொதுநல அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.....நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது...
கூட்டத்தில் இப் பணிக்காக உயர் மட்ட குழு அமைப்பது.....மேம்பால பணிகளை துரிதப் படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகளை யும்... அமைச்சர் பெருமக்களையும் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு அளிப்பது....மேம்பால பணிகள் நிறைவேறும் வரை விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை சந்திப்பகளில் இரும்பு தடுப்புகளை (பேரிகார்டுகள்) வைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வது... உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக கேபிஎஸ். மோகன்குமார் நன்றி கூறினார்...