பெருந்துறை அருகே பெண் மாயம்.
January 25, 2023
0
பெருந்துறை அருகே வீட்டிலிருந்து மாயமான பெண்ணை பெருந்துறை போலீசார் வலை வீசி தேடுகின்றனர்.
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம், வீரணம்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பணன் என்பவரது மனைவி மைதிலி தேவி(39). இவர் அந்தப் பகுதியில் சொந்தமாக தறி போட்டு தொழில் செய்து வருகிறார். இவருக்கு வெற்றி என்ற மகனும், நிவேந்திரா என்ற மகளும் உள்ளனர். வெற்றி, கருக்குப்பாளையத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, துடுப்பதி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வருகிறார்.
நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு தாயார் மைதிலி தேவி வீட்டை விட்டு செல்வதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பி அனுப்பிவிட்டு, வீட்டை விட்டு சென்று விட்டார். அவரை பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்து கிடைக்காமல் போகவே, பெருந்துறை போலீசில் இது தொடர்பாக, கணவர் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags