சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் சேலம் மாநகர காவல் துறை சார்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல்ஹோதா, அவர்களின் தலைமையில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
இதில் சட்டி உடைத்தல், ஸ்லோ சைக்கிளிங் ரேஸ், லெமன் ஆன் தி ஸ்பூன், கயிறு இழுத்தல், டம்ளரில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் கண்டு களித்திட பரதநாட்டியம், பொள்ளாச்சி மோளம் மற்றும் ரேக்கலா மாட்டு வண்டி ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.
இதில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் தெற்கு ஸ்பி லாவண்யா அவர்களும், வடக்கு மாடசாமி அவர்களும், காவல்துறை அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.