புஞ்சைபுளியம்பட்டி புஞ்சைபுளியம்பட்டியில் காந்திசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் செயல்பட்ட மாட்டு இறைச்சி கடைகளை அகற்றியதை கண்டித்தும், மீண்டும் வாரச்சந்தையில் இறைச்சி கடை வைக்க அனுமதிக்க கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.தலைமை தோழர்.
டி.சுப்பிரமணி சிபிஐஎம் பவானிசாகர் ஒன்றிய செயலாளர்.
முன்னிலை தோழர்கள்
பி.ஜெகநாதன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒன்றிய செயலாளர்
எ.பி.ராஜு ஒன்றிய தலைவர் சிறப்புரை
பி.மாரிமுத்து சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
பி.பி.பழனிசாமி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் மற்றும் மாட்டு இறைச்சி கடை உரிமையாளர்கள் சுந்தரம்,ரங்கசாமி, ஆறுமுகம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.