குக்கர் வெடித்த போது அடுப்பு அணைந்துவிட்ட நிலையில் எரிவாயு கசிந்து வெளியேறியது தெரியாமல் மீண்டும் அடுப்பை பற்ற வைத்த போது தீ வீட்டுக்குள் தீ பரவி மூதாட்டி சாலையில் நெருப்பு பற்றியது.....
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாணார்பதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற மூதாட்டி அதே பகுதியில் சிறிய அளவிலான பெட்டிகடையை நடத்தி தனியாக வசித்து வருகிறார் .
இந்நிலையில் இன்று காலை
சுப்புலட்சுமி தனது வீட்டில்
வழக்கம் போல் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்த போது திடீரென அடுப்பில் இருந்த குக்கர் வெடித்து சமையல் அறை முழுவதும்
இதனால் சமையலறை முழுவதும் சாதம் தெரித்து எரிந்து கொண்டிருந்த எரிவாயு அடுப்பு தானாக அணைந்த்து. .
இதனையடுத்து மூதாட்டி சுப்புலட்சுமி
உடனே அடுப்பை அனைக்காமல் மீண்டும் சமையல் செய்ய முயற்சித்தபோது சமையல் செய்யும் அடுப்பிலிருந்து எரிவாயு கசிந்து கொண்டிருந்ததை அறியாமால் மீண்டும் அடுப்பை பற்ற வைத்த போது அறை முழுவதும் பரவியிருந்த எரிவாயு ததீப்பற்றியதால் சுப்புலட்சுமியின் சேலையில் தீ பரவி உடல் முழுவதும் காயகங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் சுப்புலட்சுமி கூச்சலிட்டுள்ளார்
உடனே அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்த பின் சுப்புலட்சுமியை கவனித்த போது அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை நடத்தி பின் இறந்து நிலையில் கிடந்த சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மூதாட்டி இறந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்