இன்பம் பொங்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
January 14, 2023
0
பொங்கல் பண்டிகையயொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலியில் அவர் கூறியுள்ளதாவது: தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா!
Tags