ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். என்று அனைவராலும் அன்பாக அழைக்கக் கூடியவர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன். தந்தை பெரியாரின் பேரன், ஈ.வே.கி. சம்பத்-சுலோச்சனா சம்பத் தம்பதியருக்கு மகன். வரலட்சுமி என்கிற துணைவியாரும், திருமகன் ஈ.வெ.ரா,(மறைவு) , சஞ்சய் சம்பத் ஆகிய 2 மகன்கள் உள்ள னர்.ஆரம்ப கால கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்திலும் பின்னர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியிலும் படித்த பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.
சென்னை மாநில கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார். அதன் பின்னர் ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். பின்னர் ஈரோடு நகர காங்கிரஸ் தலைவராகவும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழக காங்கிரசின் மாநில பொதுசெயலாளர் பதவி யையும் அவர் வகித்தார். 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை முதல் முறையாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார். இதை அடுத்து 2003-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்தார்.
2வது முறையாக 2015ம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார். 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து சட் டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐஎன்டியூசி அமைப்பில் பங்கு கொண்டு மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார். அடையாளம் காண்பித்த காங்கிரஸ் கட்சிக்கு நாளும் விசுவாசமாக உழைத்து வருபவர்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்த காலங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பதை தமிழக மக்களும் தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சித் தலைவர்களும் உன்னிப்பாக கவனிப்பார்கள். பதவிக் காகவும், பணத்திற்காகவும் எதையும் செய்யாமல் நேர்மையுடன் இன்றும் தனது சொந்த பணத்திலேயே அரசியல் செய்கிறார்.தந்தை பெரியார் மக்களுக்காக தனது சொத்தை தானமாக தந்தார் அவரது பேரன் இளங்கோவன் மக்களுக்காக சொத்தை விற்று அரசியல் செய்து வருகிறார்.மனதில் பட்ட கருத்தை துணிச்சலுடன் கூறும் தலைவர்களில் முக்கியமாக இருப்பவர். இதற்கு அவர் பல்வேறு தர்மசங்கடங்களை சந்திக்க நேரிட்டது.ஆனால் அதைப்பற்றி அவர் துளிக் கூட கவலைப்பட்டதில்லை. குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர், அவர்களுடன் பழகும்போதுதான் நாம் நாமாக இருக்கிறோம் என்று அடிக்கடி கூறுவார்.அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர். தன்னை மிகவும் எளிமையாக காட்டிக்கொள்ள விரும்பும் நபர், நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.இடைவிடாத பணிகள் அதிகம் இருந்தாலும் அந்த பணிகளுக்கு இடையே நண்பர்களை சந்தித்து அவர்களுடன் பொழுதை போக்குவதில் அலாதி பிரியம் அவருக்கு உண்டு. சென்னையிலி ருந்து ஈரோட்டிற்கு வரும் போதெல்லாம் இங்கு உள்ள நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடன் பொழுதை கழிப்பார். மனதில் பட்ட கருத்தை துணிச்சலுடன் சொல்லும் தலைவர் இளங்கோவன். மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கு சென்வாட் வரியை நீக்கி ஜவுளி தொழிலை சார்ந்தவர்களுக்கு பேருதவி செய்துள்ளார். இதேபோல் பல்வேறு சாதனைகளை அமைச்சராக இருந்தபோது செய்து சாதனை படைத்துள்ளார் தன்மானத் தலைவர் ஈ.வி. கே. எஸ்.இளங்கோவன்.
அவர்ஈரோட்டிற்கு வரும் போதெல்லாம் இங்கு உள்ள நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடன் பொழுதை கழிப்பார்.