ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர், தன்மானத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன்னம்பிக்கை, தன்மானம் எனும் பெரியாரின் சுயமரியாதையை மனதில்கொண்டு கர்மவீரர் காமராஜரின் வழிநின்று நாளும் உழைப்பவர். காங்கிரஸ் இயக்கத்திற்கு தமிழகத்தில் வேராகவும், விழுதாகவும் திகழும் ஒப்பற்ற தலைவர்.மக்கள் பணி என்றால் மலர்ந்த முகத்தோடு ஓடோடி உழைத்திடும் உத்தமத் தலைவர். சமதர்மம் வகுப்பதிலும், ஜனநாயகம் காப்பதிலும், மதசார்பின்மையை போற்றுவதிலும் திடமாக நின்று செயல்படும் உறுதியான தலைவர். உயிரினும் மேலாக தொண்டர்களை கருதுவதிலும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் மத்தியில் மனதில் பட்டதை மன வலிமையுடன் தயங்காமல் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் சொல்லும் உன்னத குணம் படைத்தவர். சொல்லும் வார்த்தையில் இருந்து சற்றும் பின் வாங்காத தங்கத் தலைவர்.முடிவு ஒன்று எடுத்துவிட்டால் அதில் உறுதியாக நின்று கடமையாற்றி வெற்றி கொள்ளும் வல்லமை படைத்தவர். எதிர்ப்புக்கு அஞ்சாமல், வெற்றியில் திளைக்காமல், சூழ்ச்சியில் சிக்காமல் தொண்டு செய்யும் வல்லமை படைத்த தலைவர் .விரோதியாக இருந்தாலும் துன்பப்படும் போதும் சந்தோஷப்படாமல் தோள்கொடுத்து உணர வைப்பார் .தமிழக அரசியலில் தன்னிகரில்லா துணிச்சலான நடவடிக்கைகள் மூலமாக தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர். மத்திய அமைச்சராக இருந்த போதும் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவராக இருந்த போதும் நாட்டுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளார் .