Type Here to Get Search Results !

திருமகன் ஈவெரா.தந்தை பெரியாரின் கொல்லுப்பேரலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனுமான திருமகன் ஈவெரா திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

திருமகன் ஈவெரா.தந்தை பெரியாரின் கொல்லுப்பேரலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனுமான திருமகன் ஈவெரா திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்கள் உடல் நல குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  ஈரோடு கச்சேரி நகரைச் சேர்ந்தவர் திருமகன் ஈவெரா.
 தந்தை பெரியாரின் கொல்லுப்பேரலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனுமான, இவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜ் அவர்களை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  46 வயதான இவர், வீசிங் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
  இதனை அடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
  அங்கு அவரது குடும்பத்தினர். உறவினர்கள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் குவிந்து வருகின்றனர். ஈரோடு எம்பி கணேசமூர்த்தி,இறந்த திருமகன் ஈவெரா அவரின் உடலுக்கு திமுகவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.