டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது 3 மாநில தேர்தல் தேதியுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டதை யடுத்து உடனடியாக அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்.
பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைவர்கள் மற்றும் அவர்களின் பெயர்களை அற்புதப்படுத்தும் பணியில் அதிகாரிகள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமான நிலையில், இந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சற்று முன் அறிவித்தது. அறிவிப்பு வெளியான உடனேயே இந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து பொது இடங்களில் உள்ள முக்கிய தலைவர்களின் பெயர்கள், உருவப்படங்கள் அகற்றப்பட்டது. மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை, தேர்தலுக்கு தயார் படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.