கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள விளாமுன்டி வனபகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அங்குள்ள விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் அந்த யானையை விரட்டும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்...
இரவு நேரத்தில் ஒற்றயானை வெளியேற வாய்ப்புள்ளதால் அருகாமையில் உள்ள கிராம மக்களை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி வருவாய் துறையினர் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்...
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் சத்தியமங்கலம் அருகே உள்ள விளாமுண்டி வனபகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றையானை அங்குள்ள விவசாயி ஒருவரின் கரும்பு தோட்டத்தில் புகுந்தது
இதன் காரணமாக அச்சமடைந்த அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்
தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் விவசாய தோட்டத்தில் யானை முகாமிட்டு இருப்பதை உறுதி செய்தனர்
இதனையடுத்து அந்த பகுதியில் மின்சார சபளையை முற்றிலுமாக துண்டித்த பின்
யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட 50க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் கடத்தூர் காவல்துறையினரும் இணைந்து நான்கு குழுக்களாக பிரிந்து பறக்கும் கேமராவின் உதவியுடன் பட்டாசுகளை வெடித்த படி யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது கரும்பு தோட்டத்தை விட்டு வெளியே வந்த யானை பட்டாசு சத்தத்தை கேட்டவுடன் கோபமுற்று அங்கிருந்த மின் கம்பத்தை தும்பிக்கையினால் சுழற்றி பிடித்து வேறோடு பிடுங்கி சாய்த்தது
தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக இருந்தபோது ஒற்றை யானை கரும்பு பயிரிடபட்ட விவசாய நிலத்திலிருந்து வெளியேறாமல் மாலை 7 மணிவரை அங்கும் இங்கும் ஓடி போக்கு காட்டி வந்தது
இதனையடுத்து அங்கிருந்த வனத்துறையினர் ஒற்றயானை இரவு நேரம் ஆன பிறகு தானாகவே கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றுவிட வாய்ப்புள்ளதாகவும் யானை செல்லும் பாதையின் குறுக்கிடும்படியாகபொதுமக்கள் யாரும் சாலையில் செல்ல வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்த பின் தொடர்ந்து காசிபாளையம் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றையானையை கண்கானிக்கும்
பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .