ஒரே மாதிரியான குறு உற்பத்தி தொழிலில் ஈடு பட்டுள்ளவர்கள் குழும் மாக இணைந்து செயல் பட்டால், தொழில் மேம்பாட்டுக்கான அதிந வீன இயந்திரங்கள் வாங்கு வதற்கு மாநில அரசு மானி யம் வழங்குகிறது.
மதுரையில் மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோ தொழில் நிறு வனம் இதற்கு வழிகாட் டுகிறது. தனித்தனியாக குறுந்தொழில் செய்பவர் கள் அதிநவீன இயந்திரங்கள், கருவிகள் வாங்கிதொழிலை மேம்படுத்து வது சிரமம். ரெடிமேட் ஆடை தயாரிப்பு, உணவு, அப்பளம், ஊறுகாய், மிட் டாய், இன்ஜினியரிங், ரப்பர் என எந்த தொழில் செய்தாலும் குறைந்தது 20 பேர் உறுப்பினர்களாகஇருக்க வேண்டும். புதிதாக குழுமத்தை (கிளஸ்டர்) உருவாக்கவேண்டும். அதிநவீன
இயந்திரங்களை நிறுவுவதற்கேற்ற இடத்தையும், கட்டடத்தையும் குழுமத்
தினர் தேர்வுசெய்ய வேண் டும். இயந்திரங்களைவாங்குவதற்கான மதிப்பில் 80 சதவீதம் வரை மாநில அரசு மானியமாக வழங்கும்.
தேர்வு செய்த இடத் தில் இயந்திரத்தை நிறுவி, குழுமத்தினர் அனைவரும் பயன்பெறலாம்.இம்முறையில் மதுரை மாவட்டத்தில் முறையாக முதன் அப்பள
குழுமத்தினர் இணைந்துள்ளனர். மற்ற தொழில்செய்பவர்களும்குழும்முறையில் இணைந்தால் மாவட்ட தொழில்மையம் அல்லது புதுார்சிட்கோ நிறுவனத்தை
அணுகலாம்.