புதுச்சேரி சர்வதேச யோகா திருவிழா வில்-ஈரோடு, வேளாளர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
புதுவை சுற்றுலாத்துறை சார்பில் 28வது சர்வதேச யோகா திருவிழா புதுச்சேரி - ஜனவரி 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில்பலமாநிலங்க ளிலிருந்து 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் ‘ஈரோடு திண்டல் வேளாளர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், பயின்று வரும் ளு.ஆ.தக்ஷயா ஸ்ரீ (8ம் வகுப்பு) ளு.ஆ.சுபிக்ஷா (6ம் வகுப்பு) ஆகிய இருவரும் 9 ம் வகுப்பு14 வயது பிரிவில் பங்கேற்றனர். மாணவி ளு.ஆ.தக்ஷயா ஸ்ரீ 2வது இடம் பிடித்து புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பரிசு பெற்று சாதனை புரிந்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற அவர்களை வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, தாளாளர்சந்திரசேகர், பொருளாளர் அருண், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியை, மேலாளர் மற்றும் ஆசிரியைகள் அனைவரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.