Type Here to Get Search Results !

இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி ஈரோட்டில் அரசியல் கட்சியினர் வேட்டி-துண்டு மும்முரம் விற்பனை

இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி ஈரோட்டில் அரசியல் கட்சியினர் வேட்டி-துண்டு மும்முரம் விற்பனை 
ஈரோடு, ஜன.22 -
திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. திமுக அதிமுக போன்ற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற தொடங்கியுள்ளது. முக்கிய கட்சிகள் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. 
இந்நிலையில் முக்கிய கடைவீதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்டி, சேலை, குண்டு கொடிகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி ,ஆர். கே. வி.ரோடு, மணிக்கூண்டு, திருவேங்கடசாமி வீதி, சொக்கநாதர் வீதி உட்பட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் ஜவுளி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கட்சி வேஷ்டிகள் ரூ.110 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலைகள் ரூ.150 முதல் ரூ.400 வரையும், கட்சிக் கொடிகள் 20 முதல் 50 ரூபாய் வரையும், கட்சி துண்டுகள் 30 முதல் 50 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வேட்டி சேலை துண்டு கட்சிக்கொடி விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இங்கு இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஜவுளிக்கடைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்டி சேலை துண்டுகள் கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. அ.தி.மு.க -தி.மு.க, பாரதிய ஜனதா, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் கட்சி கொடிகள், கட்சி கலர், பொருந்திய வேட்டி, சேலைகள், துண்டுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, ஈரோடு ஜவுளி சந்தையில் அரசியல் கட்சியினர் வேட்டி, சேலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வரும் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தொடர்ந்து தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.  வாக்காளர்கள் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களும், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வேட்பாளர்கள் பொதுமக்களை கவரும் வகையில்,

ஈரோடு ஜவுளி சந்தையில் அரசியல் கட்சியினர் வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல் துண்டு, மப்பிளர், தொப்பி விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.ஈரோடு ஜவுளி சந்தையில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் வண்ணம் பொறித்த வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. சேலையை பொறுத்தவரை ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. வேட்டியை பொருத்தவரை ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துண்டு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மப்பிளர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறும்போது, கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கடந்த 2

இரண்டுநாளில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக சில்லரை வியாபாரம் ஓரளவு நடந்து வருகிறது. தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைஒட்டி அரசியல் கட்சியினர், தொண்டர்களை கவரும் வகையில் வேட்டி, சேலைகள் விற்பனை கடந்த 1 வாரமாக மும்முரமாக நடந்து வருகிறது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.