காங்கேயம் குழும நிறுவனங்களில் பொங்கல்நிகழ்ச்சிகொண்டாடப்பட்டது.காங்கேயம் குழும நிறுவனங்களின் 2023 ஆம் ஆண்டு பொங்கல் விழாவின் ஓர் பகுதியாகவும்,இந்திய இளைஞர் தினம் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய விழாக்கள் கொண்டாடும் பொருட்டு கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது . வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த விழாவை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு கல்லூரி வளாகம் தீரன் சின்னமலை கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காங்கேயம் குழும நிறுவனங்கள் சார்பில் கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள வித்யா கணபதிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. காங்கேயம் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் காங்கேயம் இன காளைகள் கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு உரி அடித்தல் ,கயிறு இழுத்தல்,கபடி போட்டி ,கோலப்போட்டி ஆகியவை சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி ஆசிரியர்களுக்கு கயிறு இழுத்தல், உரி அடித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் காங்கேயம் குழும நிறுவன மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது.
காங்கேயம் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் C .வெங்கடேஷ் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மேற்கொண்டிருந்தார். காங்கேயம் குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் தலைவர் திரு. N . ராமலிங்கம் அவர்கள், செயலாளர் திரு. C. K . வெங்கடாச்சலம் அவர்கள், பொருளாளர் திரு. C .K . பாலசுப்ரமணியம் அவர்கள் மற்றும் தாளாளர் S . ஆனந்த வடிவேல் அவர்கள் ஆகியோர் தை திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.