23வது தேசிய அளவிலான உரை வாழ் வீச்சு போட்டி கடும் சவால்களை சர்வதேச உறைவாள் வீச்சு போட்டிக்கு தேர்வாகி தமிழகத்திற்கும் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கும் பெருமையை தேடி வந்துள்ளனர்...
மைனஸ் இரண்டு டிகிரி குளிரில் நடந்த உறைவாள் வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வாகி தமிழகம் திரும்பிய அரசு பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்...நாடு முழுவதும் 22 மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில் 900 மாணவர்கள் பங்கு பெற்றனர்... இதில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவியர் 90 மாணவியர் பங்கு பெற்றனர்...
ஜம்மு காஷ்மீரில் மைனஸ் 2 டிகிரி யாக குளிரில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்...
இந்த சூழலில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவியர் ஜம்முதாவி எஸ் சி எஸ் டி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்றனர்...
கடும் குளிரில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் கர்நாடகா ஆந்திரா ஒடிசா ஹரியானா இமாச்சல் அசாம் உட்பட பல போட்டியாளர்களை நேருக்கு நேர் எதிர் கொண்டனர்...
கடும் சவால்களை எதிர்கொண்ட தமிழக அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் 11 தங்கம் 15 வெண்கலம் உட்பட ஒட்டு மொத்தமாக முதலிடம் பிடித்து தமிழகம் திரும்பி உள்ளனர்...
மேலும் நேபாள நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச உறைவாள் வீச்சு போட்டிக்கு தேர்வாகி தமிழகத்திற்கும் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கும் பெருமையை தேடி வந்துள்ளனர்...
ஒரு வார கால ரயில் பயணத்துக்கு பின்னர் ரயில் மூலமாக ஈரோடு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்..