Type Here to Get Search Results !

அண்ணன்-தம்பி கத்தியால் குத்தி கொலை; உறவினருக்கு வலைவீச்சுஈரோட்டில் பயங்கரம்

 அண்ணன்-தம்பி கத்தியால் குத்தி கொலை; உறவினருக்கு வலைவீச்சு
ஈரோட்டில் பயங்கரம் 
ஈரோட்டில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் தேடி வருகிறார்கள். குலை நடுங்கச்செய்யும் இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அண்ணன்-தம்பி ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர்களுடைய மகன்கள் கவுதம் (வயது 30), கார்த்தி (26). இதில் கார்த்தி நாம்தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் பொருளாளர் ஆவார். இவர்கள் செக்கு எண்ணெய், மசாலா பொடிகள், மலை தேன் போன்றவற்றை வீட்டிலேயே விற்பனை செய்து வந்தனர். அண்ணன், தம்பிக்கும் அவர்களது மாமாவான மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கவுதம், கார்த்தி ஆகியோரும் ஆறுமுகசாமியும் செல்போனில் பேசிக்கொண்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கத்திக்குத்து இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணிஅளவில் கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது, அவர்களது வீட்டுக்கு ஆறுமுகசாமி வந்து தகராறு செய்து உள்ளார். சத்தம் கேட்டு கவுதம், கார்த்தி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்
அப்போது அண்ணன்-தம்பிக்கும், ஆறுமுகசாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கார்த்தி செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கவுதமையும் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அங்கேயே சரிந்து விழுந்தனர். பின்னர் ஆறுமுகசாமி அங்கிருந்து தப்பி ஓடினார். கொலை உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு காரில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆறுமுகசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். ஈரோட்டில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அண்ணன், தம்பி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.