Type Here to Get Search Results !

ஈரோடு கிழக்கு தொகுதி த.மா.காவுக்கு ஒதுக்குவதில் மாற்று கருத்து இல்லை- விடியல்சேகர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி த.மா.கா வுக்கு  ஒதுக்குவதில் மாற்று கருத்து இல்லை- விடியல்சேகர் தகவல் 
 
அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணி தொடங்கியது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்துள்ளது. கூட்டணி தர்மபடி தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைவர் ஜி.கே.வாசன் முறைப்படி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார். நாங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் தேர்தல் பணி தொடங்கி விட்டார்கள். கூட்டத்தில்கூட கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.-த.மா.கா இடையே எந்தஒரு போட்டியோ மோதலோ ஏற்படவில்லை.அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், பாரதி ஜனதா ஆகிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 18 மாதமாக பல்வேறு பிரச்சினைகள் மக்கள் சந்தித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.இந்த தேர்தலை பொருத்தவரை நாங்கள் அ.தி.மு.க. தலைமையில் தி.மு.க. அரசின் விரோத போக்கை எடுத்து கூறுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு தலைவர்கள் கூடி பேசி முடிவு செய்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.