பாஜக வின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் உள்ள ரபேல் வகை கடிகாரம் காபிடே அதிபரிடம் பெற்றது அது இலஞ்ச கணக்கில்தான் வரும்..
ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறும் அண்ணாமலை ரபேல் கடிகாரத்தை பெற்றதற்கு முதலில் பதில் கூற வேண்டும் என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கோபியில் பேட்டி...
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்புரைக்கான பயண திட்டங்கள் குறித்து நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.
பின்னர் திராவிட விடுதலை கழகத்தின் தலைலைர் கொளத்தூர் மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது.....
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவிலகளின் அறங்காவலர்களாக நியமிக்க கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்....
அரசின் கொள்கை முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும் நீதிமன்றங்களின் உத்தரவு பொருத்தமானதாக இருக்காது நீதிமன்றங்கள் வரம்போடு நடந்து கொள்ளவேண்டும் எனவும்,
திராவிட அரசியல் காரணமாக தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டதாக கருத்து தெரிவித்த ஆளுநர்
அவருக்கான வேலையை மட்டும் ஒழுங்காக செய்தால் போதும் அரசின் அறிவுரைபடி செயல்படுவது மட்டுமே அவரது பணியாகும் ஆர்எஸ்எஸ்,மற்றும் பாஜகவின் அரசியலை இங்கே புகுத்துவது ஆளுநரின் பணி அல்ல என்றும்
,இஸ்லாமிய மற்றும் கிருத்துவ்களின் விழாக்களை புறக்கணித்து விட்டு அரசு பணத்தில் தசாரா பண்டிகைக்கு கொலு வைத்து கொண்டாடி வருகிறார்
ஆளுநருக்கு விருப்பமாக இருந்தால் கமலாலயம் சென்று பாஜகவில் பொருப்பு வாங்கி கொண்டு அவ்வாறு செயல்படலாம் என்றும்
தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரால் ஒப்புதல் பெற்ற பிறகே தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது.
எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாத சந்தேகம் ஆளுநர் ரவிக்கு வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது
ஆளுநர் முதலில் மகாராஷ்டிராவின் பெயரை மொழிபெயர்த்து தெரிந்து கொண்ட பின் அதனை
மாற்றி காட்டட்டும் பிறகு தமிழகத்தை பற்றி பேசுவதை பார்க்கலாம் எனவும்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையேழுத்திட நேரமில்லை சூதாட்டம் நடத்தும் முதலாளிகளை வைத்து கொண்டு பேசும் போக்கு
சந்தி சிரிக்கிற நேரத்தில் ஆளுநர் தனது வாயை அடக்கி கொண்டு இருந்தால் மரியாதை என்றார்
ஈஷா மையத்தில் நடைபெறும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டுள்ளது சாமியார் அனைவருமே போலியானவர்கள் தான்
சாமியார்களில்இதுவரை கைது செய்யப்பட்ட சாமியார் கைது செய்யப்படாத சாமியார் என இரண்டு வகை தான் உள்ளது
இதில் கைது ஆகும் சாமியார் பட்டியலில் ஈஷா சாமியார் இடம்பெறுவார் என்று தெரிவதாகவும்
பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் செயல் குறித்து பேசுகையில்
அண்ணாமலை இப்போது பார்பனர்களின் கட்சியில் இருப்பதால் அவர்களைப்போல அண்ணாமலைக்கும் ஆணவம் வந்து விட்டதால் அதனால் தான் அப்படி ஆணவமாக பேசி வருகிறார் என்றும்
அண்ணாமலை இன்னும்காவல்துறை அதிகாரி மனநிலையிலிருந்து ம் அரசியல் கட்சியின் தலைவர் என்ற மனநிலைக்கு வரவில்லை என்பது அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது அவருக்கு விரைவில் அரசியல் அறிவு வரவேண்டும் என்பதே எங்களுக்கு விருப்பம் எதிர் வரும் காலத்தில் சிறிதளவாவது அரசியல் அறிவை பெற்றவராக அண்ணாமலை வளர வேண்டும் என்றும்
2016ம் ஆண்டில் காபிடே உரிமையாளர் சித்தார்த் ரபேல் வகை கடிகாரத்தை வாங்கியுள்ளார் அவரிடமிருந்து அன்றைய ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை அந்த ரபேல் வகை கடிகாரத்தை வாங்கியுள்ளது இலஞ்ச கணக்கில் தான் வரும் என்றும்
அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறும் அண்ணாமலை ரபேல் கைகடிகாரம் பெற்ற இலஞ்ச ஊழல் கணக்கிற்கு முதலில் பதில் சொல்ல வேண்டும் என கேட்டு கொள்வதாக கொளத்தூர் மணி தெரிவித்தார்.