----------------------------------------
நாள் - 19-01-2023.பவானிகாலிங்கராயன் மணி மண்டபம், .காலை 11மணி
தமிழர்களின் பொறியியல் வரலாற்றுக்கு எடுத்துக்காட்டுகளில் ஒன்றான காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு ஒப்படைக்கப்பட்ட 741 வது நாளை காலிங்கராயன் தின விழாவாக கால்வாய் வெட்டிய நீராத்மா காலிங்கராயன் அவர்களின் நினைவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதிக்கு கால்வாய் வெட்டி நீரை எடுத்துச் சென்ற அறிவியல் தொழில்நுட்பம் இன்று வரை உலக அளவில் போற்றப்பட்டு வருகிறது.
காலிங்கராயன் நினைவு மணிமண்டபத்தில் நாளை நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளும், பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்களும், அமைப்புகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்கள்.
அது சமயம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பிலும் காலிங்கராயன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்படவுள்ள நிகழ்வுக்கு வருமாறு சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் உழவர்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஈரோடு வடக்கு மாவட்ட குழு,ஈரோடு தெற்கு மாவட்ட குழு, மிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்சிவசுப்ரமணியம்,
வழக்குகள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் அழைக்கிறார்