Type Here to Get Search Results !

கோபி சாராதா இன்டர்நேஷ்னல் பள்ளியில் நடைபெற்ற 6ம் ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பரிசுகளை வழங்கினார்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாராதா இன்டர்நேஷ்னல் பள்ளியில் நடைபெற்ற 6ம் ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரியில் செயல்பட்டு வரும் சாரதா இன்ட்டர்நேஷனல் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்
இந்நிலையில் பள்ளி மாணவர்களின் மனழுத்தத்தை போக்கும் வகையிலும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ மாணவ தனிதிறனை மேம்படுத்தும் வகையிலும் 6ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது 
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் யோகா, கபடி, கைபந்து, கால்பந்து, ஈட்டி, எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடைபெற்றன
இவ்விளையாட்டு போட்டியில் பிரம்மோஸ், ஆகாஷ் நிர்பய் மற்றும் திரிசூல் என நான்கு அணிகளாக பிரிந்து மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்
இப்போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர் 
இறுதிப்போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி அசோக்குமார் கலந்து கொண்டு கோப்பை மற்றும் பதங்களை வழங்கி பாராட்டினார் 
இறுதிபோட்டியில் பங்கேற்று உற்சாகபடுத்திய பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு 100மீட்டர் மற்றும் 200மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது இதில் மாணவ மாணவிகளுக்கு நிகராக பெற்றோர்களும் விளையாட்டு போட்டியில் பங்கேற்று பரிசுகளை தட்டி சென்றனர்
நிகழ்ச்சி இறுதியில் மாணவ மாணவிகளின் மூங்கில்நடனம், சிலம்பம், பிரமிடு சாகசம், மற்றும் குழந்தைகள் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது 
நிகழ்ச்சியில் பள்ளிதாளாளர் பெருமாள்சாமி, செயலர் சீதாலட்சுமி, தலைவர் இராமகிருஷ்ணன், கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மெளதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.