ஆறு மாதத்தில் முடிக்கப்பட வேண்டிய அத்திக்கடவு அவினாசி திட்டம் ஒன்றரை ஆண்டுகளாகியும் முடிக்கப்படாமல்உள்ளதாகசத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டியில் நடைபெற்ற எம்ஜியார் பிறந்தநாள்விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புன்செய் புளியம்பட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கூடியிருந்த தொண்டர்களிடையே உரையாற்றியபோது.
ஆறு மாதங்களில் முடிவடைய வேண்டிய அத்திக்கடவு அவினாசி திட்டம் ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளதெனவும்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூடியிருந்த தொன்டர்களிடையே செங்கோட்டையன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில்முன்னாள்எம்.எல.ஏ.ஈஸ்வரன் மற்றும் சத்தி.பவானிசாகர் ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.