Type Here to Get Search Results !

திங்களூர், போல நாயக்கன் பாளையம் ஆதி திராவிடர் காலனியில் 6 பொதுக் கழிப்பறைகள்பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் 
தோழர்.கே.சுப்பராயன் MP தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, 
திங்களூர், போல நாயக்கன் பாளையம் ஆதி திராவிடர் காலனியில் ரூ.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 6 பொதுக் கழிப்பறைகள் இன்று (1-1-2023) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.

அப்பகுதியைச் சேர்ந்த செல்வி. செளம்யா என்ற சிறுமி ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே.சுப்பராயன் MP
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையாளர் திருமதி சி.ஜோதிபாக்கியம், 
போலநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. எஸ்.சரஸ்வதி சோமசுந்தரம், துணைத் தலைவர் திருமதி.கண்ணம்மாள் ராஜா, ஊராட்சி செயலாளர் திரு.எம்.பாலசுப்பிரமணி, கணபதி நகர் பகுதி வார்டு உறுப்பினர் திரு.சண்முகசுந்தரம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சி.எம்.துளசிமணி, ஒன்றியச் செயலாளர் தோழர் வி.சி.செந்தில்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் ஜெ.உமாநாத் சிங், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் வி.சி.ராஜகோபால், எம்.பாபு, கே.என்.பொன்னுசாமி, பி.எஸ்.நல்லசாமி, T.D.மோகன்குமார் திங்களூர் கிளை தோழர்கள் பி.கே.சேகர், ஜீவானந்தம், சி.கண்ணன், கருப்புசாமி மற்றும் போலநாயக்கன்பாளையம் காலனி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.