Type Here to Get Search Results !

ஈரோட்டில் 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும்18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை

 ஈரோட்டில் 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும்18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை.. 
ஈரோட்டில் 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும்18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்று சாதனை
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி என ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைகளில் விவசாயிகள் நேரடியாக தாங்கள் விளைவிக்கும் காய்களை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் வெளி இடங்களை விட காய்கறிகள் விலை இங்கு மலிவாக கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் உழவர் சந்தைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் இங்கு காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த 6 உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.50 கோடியே 11 லட்சத்து 67 ஆயிரத்து 565 மதிப்பி லான 18 ஆயிரத்து 231 டன் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்தனர். இதன் மூலம் 26 லட்சத்து 45 ஆயிரத்து 408 நுகர்வோர்களான பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர் என உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.