ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் போராட்டம்ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்5 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை நாளில் கள ஆய்வுக்கு அழைப்பதை கைவிட வேண்டும். அனைத்து வட்டாரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிற துறை பணிகளில் ஈடுபடும் போது இத்துறைக்கான பணிகளை செய்ய முடியவில்லை. இவற்றை கைவிட வலியுறுத்தியும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலக மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை திரும்ப பெற வேண்டும் உள்பட என 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், 14 ஒன்றியங்கள் மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2ஆம் தேதி முதல் விதிப்படி வேலை செய்தல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் போராட்டம் வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் பணியாற்றும் அலுவலகர் என 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர். இந்நிலையில் வரும் 10-ந் தேதி முதல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.