Type Here to Get Search Results !

இன்று முதல் 3 நாட்களுக்கு அ.தி.மு.க., திமுக வினர்கள் வீடு வீடாக வாக்காளர் சரி பார்க்கும் பணியை தொடங்கினர்

இன்று முதல் 3 நாட்களுக்கு
அ.தி.மு.க., திமுக வினர்கள் வீடு வீடாக வாக்காளர் சரி பார்க்கும் பணியை தொடங்கினர்
ஈரோடு, ஜன.28 -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரசுக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரசாரத்தை தொடங்கி விட்டார். தே.மு.தி.க, அ.ம.மு.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டனர். பாட்டாளி மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டன. நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ளார். மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது. பாரதிய ஜனதா நிலைப்பாடு இன்னும் தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தங்கள் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறிவிட்டார். இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.எதிர்க்கட்சி வேட்பாளர்களை சமாளிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பலரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
 இதற்காக அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் இரண்டு நாட்களாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 117க்கும் மேற்பட்ட தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தல் பணி குழுவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த தேர்தல் பணி குழு பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தேர்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூறினார். 
ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதியிலேயே நிறைவடைகிறது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதிலை உள்ளடக்கி உள்ளது. எனவே அதிமுக சார்பில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு முன்னாள் அமைச்சர் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் உள்ளூர் பொறுப்பாளர்களும் இணைந்து அந்தந்த பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர் செல்வாக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று எடப்பாடி அறிவித்திருந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏராளமானவர்கள் வெளி மாவட்டங்களில், வெளியூர்களில் பணிபுரிந்து வருகின்றனர். சிலர் இடம் மாறுதல் பெற்று சென்று உள்ளனர் சிலர் பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்திருக்கலாம். ஏற்கனவே தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அசோகாபுரம், பி.பி. அக்ரஹாரம், கருங்கல்பாளையம், பெரியார் நகர், வீரப்பன்சத்திரம் ஆகிய 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 
எத்தனை பேர் வெளியூரில் பணிபுரிகின்றனர். அவ்வாறு வெளியூரில் பணிபுரிபவர்களின் செல்போனில் விவரங்களை சேகரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பணி இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு வீடு வீடாக செல்லும் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும், தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்திக்கும் துயரம் குறித்தும் பட்டியலிட்டு நோட்டீஸ் ஆக விநியோகம் செய்து வருகின்றனர். வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே ஈரோடு கிழக்கு தொகுதியில் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் ஈரோட்டு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது
ஆகிய பகுதிகளுக்கு வாக்குச்சாவடி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக சார்பில் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று வீட்டில் வாக்காளர்கள் இருக்கிறார்களா? இறந்தவர்களின் விவரம் போன்றவற்றை சேகரிக்க தொடங்கியுள்ளனர். .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.