ஈரோடு மாநகராட்சி 36-வது வார்டு பொதுமக்களுக்கு மாமன்ற உறுப்பினர் பழனியப்பா செந்தில்குமார், தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்
January 09, 2023
0
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாநகராட்சி 36-வது வார்டு பொதுமக்களுக்கு மாமன்ற உறுப்பினர் பழனியப்பா செந்தில்குமார், தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags