திங்களூர், வெட்டையங்கிணறு ஊராட்சி, கணபதி நகரில் சுமார் 150 குடும்பங்களின் தண்ணீர் தேவையைப் போக்கும் வகையில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு இன்று (1-1-2023) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை ஒன்றியச் செயலாளர் தோழர் வி.சி.செந்தில்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே.சுப்பராயன் MP
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையாளர் திருமதி சி.ஜோதிபாக்கியம்,
வெட்டையங்கிணறு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. எஸ்.சங்கீதா சக்திவேல், ஊராட்சி செயலாளர் திருமதி.வெங்கடேஷ்வரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சி.எம்.துளசிமணி, ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் ஜெ.உமாநாத் சிங், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் வி.சி.ராஜகோபால், எம்.பாபு, கே.என்.பொன்னுசாமி, பி.எஸ்.நல்லசாமி, T.D.மோகன்குமார் திங்களூர் கிளை தோழர்கள் பி.கே.சேகர், ஜீவானந்தம், சி.கண்ணன், கருப்புசாமி மற்றும் கணபதி நகர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.