காங்கேயம்இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லூரியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் இருந்து 3000 மாணவ மாணவிகள் பங்குபெற்று பயனடைந்தனர்.
காங்கேயம் குழும நிறுவனங்கள்
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சி ஒருங்கிணைத்து நடத்தியது. திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் இருந்து 3000 மாணவ மாணவிகள் பங்குபெற்று பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக R.அஸ்வின், வாழ்க்கை வழிகாட்டல் நிபுணர், தாராபுரம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அதற்கு தயார் படுத்திக் கொள்வது பற்றி உரையாற்றினார்.
கல்வி என்ற இலக்கை நோக்கி ஓடும்போது அதன் முழுப்பலனை பயன்பெறமுடியும் என்று மாணவர்களை ஊக்குவித்தார். 'கல்விக்கு பணம் முக்கியமன்று,படிக்கவேண்டும் என்ற எண்ணமே முக்கியம்'. பெற்றோரையும் கல்வியையும் மதிக்கிறவர்களே வாழ்க்கையில் ஜெயிப்பீர்கள் ,மதிக்காதவர்கள் தோற்ப்பீர்கள் என்று கூறினார் .உறக்கத்தை குறை ,அதிகமாக படி, முன்னேற்றத்தை காண்பாய்.லட்சியப்பாதையில் பயணிக்கலாம் என்று கூறினார் .
வாழ்க்கையில் தனக்குப்பின் உதாசீனப்படுத்துவோரை பொருட்படுத்தாமல் உன் நம்பிக்கையை பெற்றோர் மற்றும் கல்விமேல் வை .வீசும் தென்றல் உன்வசம் நாளைய சரித்திரம் உன்னை பேசும் என்ற நம்பிக்கை உரையை நிகழ்த்தினார்.இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைந்தது . மாணவர்களின் கேள்விகளுக்கு சிறப்புவிருத்தினர் பதிலுரை அளித்தார். அதன் மூலம் இந்த நிகழ்ச்சி ஒரு கலந்துரையாடலாக அமைந்தது.
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் S .கோபாலகிருஷ்ணன், காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லூரியின் முதல்வர் முனைவர் G.சுரேஷ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர் . காங்கேயம் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி
முனைவர் C .வெங்கடேஷ் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மேற்கொண்டிருந்தார். காங்கேயம் குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் தலைவர் N . ராமலிங்கம் , செயலாளர் C. K . வெங்கடாச்சலம் , பொருளாளர் C .K . பாலசுப்ரமணியம் மற்றும் தாளாளர் S . ஆனந்த வடிவேல் அவர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .