வாலிபர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பல்
3 பேர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
ஈரோடு ஜனவரி 16
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதீர் (29). வேலை தேடி தனக்கு நண்பர் திலிப்பை பார்க்க ஈரோடு வந்தார். வீரப்பன்சத்திரம், கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் திலிப்புடன் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திலீப் , சுதீர் வீட்டில் இருந்தனர். போய் திடீரென 7 பேர் கொண்ட கும்பல் திலீப் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் சுதீர், திலிப் இருவரையும் தாக்கினர். திலிப்பிடம் இருந்து ரூ. 5,200 பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த கும்பல் இருவரது செல் போனையும் பறித்தனர். செல் போனில் கூகுள் -பே இருப்பதை அறிந்து கொண்ட அந்த கும்பல் பணம் அனுப்புமாறு கேட்டு ஆயுதங்களை காட்டி இருவரையும் மிரட்டி உள்ளனர். உயிருக்கு பயந்து இருவரும் ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் குடும்ப நண்பர்களுக்கு போன் செய்து கூகுள் பேவுக்கு ரூ.40 ஆயிரம் ரூபாய் பெற்று பின்னர் கும்பலுக்கு தந்தனர். இதனைத் தொடர்ந்து ஆம்னி வேனில் இருவரையும் ஏற்றுச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடத்திச் சென்று இறக்கி விட்டு சென்று விட்டனர். பின்னர் இருவரும் பொதுமக்கள் உதவியுடன் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வீரப்பன்சத்திரம், பெரியவலசு ராதாகிருஷ்ணன் வீதி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34), திருச்செங்கோடு, சூரியம்பாளையம் , காட்டுவலசை சேர்ந்த பூபதி (21), பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின் குமார்(22) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சோமசுந்தரம், லிங்கேஷ், பிரவீன் பிகாசு ஆகியோரை தேடி வருகின்றனர்.